உதாரணம்/வைதேகி

.
எந்தத் தடை வந்தாலும்
தகர்ந்து போகுமென்பதற்குப் பின்னால்
விருட்சங்களைச் சுமக்கும் ..
விதைகளின் மௌனமும்…
விடியல் தீண்டுமென்ற
விசும்பின் காத்திருப்பும்
ஆகச்சிறந்த உதாரணங்களாகின்றன.