
வயோதிகம்
முடி வெளுத்த காலத்தில்
படி தடுக்கும் வேளையில்
துணிவாக இருந்தாலும்
பணிய வைக்கும்
உறவுகள் உந்தித்தள்ளத்
துறவறமே சிறந்ததா?
சொல் மனமே சொல்.
கரப்பான் பூச்சி
அந்த இரவில்
பழைய அறையில்
நின்ற
நடந்த
ஓடிய
பறந்த கரப்பான் பூச்சிகள்
அந்த அறையை
ஆக்கிரமித்துக் கொண்டன
வேடிக்கை பார்த்தான், பின்னே
ஒதுங்கினான் பயத்தால்
கதவை மூடினான்
07 07 2023
(கவிதை வாசிக்கலாம் வாங்க 8 ல் (07.07.2023) படித்த கவிதைகள்)

உறவுகள் வதை.துறவறம் இதம்???
கரப்பான் பூச்சிகள் வாதை???
நன்றி