விலங்குக் கொழுப்பில் எரியும் விளக்கு/தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி


—————-
பால் செலான்
தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி
——————————————-

விலங்குக் கொழுப்பில் எரியும் விளக்கு
—————-
பால் செலான்


தமிழில் : எம்.டி.முத்துக்குமாரசாமி
——————————————-

துறவிகள் தங்கள் மயிரடர்ந்த விரல்களால் புத்தகத்தை
திறந்தனர்: செப்டம்பர்.
இப்போது ஜேசன் புதிதாய் முளை விடும் தானியத்தின்
மேல் பனியை வீசுகிறான்.
காடு உனக்கு கழுத்தாபரண கைகளை அளித்தது.
அவ்வளவு இறந்தவனாய் நீ கயிற்றின் மேல் நடக்கிறாய்
உனது முடியில் இன்னும் கருமையான நீலம்
சேர்க்கப்பட்டிருக்கிறது; நான் காதலைப்
பற்றி பேசுகிறேன்
கிளிஞ்சல்களை நான் பேசுகிறேன், மிருதுவான
மேகங்களைப் பற்றியும்; ஒரு படகு மழையில்
மொட்டவிழ்க்கிறது.
ஒரு சிறிய பொலிக் குதிரை பக்கங்களைப் புரட்டும்
விரல்களின் மேல் பாய்ந்தோடுகிறது-
கறுப்புக் கதவு விரைந்து திறக்கிறது, நான் பாடுகிறேன்:
நாம் எப்படி இங்கே வாழ்கிறோம்?