
1.கல்யாண விருந்தில் பசியில்லை!
2.ஓடியோடி காலத்தைக் கடத்தும்
கடிகார முட்கள்!
3.முதியோர் இல்லங்களில்
அனுபவங்களின் அணிவகுப்பு!
4.வெட்டியான் வீட்டில் சாவு!
- வட்டில் கஞ்சியை சுவையாக்கும்
ஏழையின் கண்ணீர் !
6.நூலகப் புத்தகங்களின்
பக்கங்கள் கசங்கவில்லை!
7.இரவுக் காவலர்களாக
என்றும் மின்மினிப் பூச்சிகள்!
8.குடம் குடமாகப் பாலாபிஷேகம்
9.மழலை கையில் எழுதுகோல்
விதவிதமான சித்திரங்கள்!
10.கல்வித் தொழிற்சாலை வாசலில்
புத்தக மூட்டைத் தொழிலாளிகள்!

மிக மிக அருமை