
நண்பர் ஒருவரை வெகுநாள் கழித்து
நேரில் பார்க்க விரும்பினேன்
போகும்போது நல்ல பரிசு ஒன்று தரவும் ஆசை.
ஆச்சரியம், எதை நினைத்தேனோ
அது அவரிடம் இருக்கிறது என்றார்!
ஏற்கனவே இல்லாத,
வினோதமானதைத் தருகிறேனே
எனக் கேட்டதும்
ஏற்கனவே இல்லாத ஒன்றைத்
தான்
வைத்திருப்பதாகக் கூறினார்
சரி, எதுவுமில்லாமல்
வெறுங்கை வீசி நான் மட்டும் வருகிறேன்
என்றதும்
எப்போதும் என்னோடு இருக்கும் நீங்கள்
அங்கிருந்து வந்து
பார்க்க அவசியமென்ன?
கூர்மையாகச் சொல்லி விட்டார்
அவர் பதிலில் சாந்தம் இருந்தது
மனம் விடுவதாயில்லை
சட்டென்று
புதிய நாள்
புதிய நிழல்
வந்து பாருங்கள் இங்கு என்கிறேன்
புன்னகையுடன் பார்க்கிறார்..
புதிய நண்பர்.
13/07/2023
…and the day sustains
