உறவின் பிடி/கலைச்செல்வி


நெரிசல் மிகுந்த காலை நேரத்தில் சாலை கடக்கத் தடுமாறும்
அம்மாவயதானஒருத்தியை
கைப்பிடித்து கூட்டிச் செல்கிறேன்.

அவ்வப்போது தளர்கிற பிடியினைத் தாளாது
என் அம்மாவைப் போலவே இருக்கிறீர்கள்
சொல்லி விடுகிறேன்

பிடிமானத்திற்கென
பிடித்திருந்த கைகள் இப்போது
ப்ரியமாய் இறுக்கிக் கொள்கிறது எல்லாவற்றுக்கும் பிடிப்பிருந்தால்
வாழ்வு கடக்கிற தூரம் தான்


12.3.2023

One Comment on “உறவின் பிடி/கலைச்செல்வி”

Comments are closed.