இரு கவிதைகள்/எல்.ரகோத்தமன்


 


 
1)        சட்டம்
 
நீண்ட மதிலுக்கு
அப்பக்கம் நீ!
இப்பக்கம் நான்!
நம்மை கண்காணிக்க
மதில் மேல் பூனை!


                                   
 
 
2)        எலிகளும் பூனைகளும்
 
ஒரு மாயக்காரனின்
வாத்திய இசையில் மயங்கி
ஊரிலுள்ள எலிகளெல்லாம்
அவன் பின் ஆவலுடன்
ஓடின எங்கே போகிறோம்
என்று தெரியாமலே!
எலிகளற்ற ஊரில்
உணவின்றி
தனிமை கொண்டன பூனைகள்!
பூனைகளை  தத்தெடுக்க
பிராணி நல அன்பர்கள்
எவருமில்லை ஊரில்!
அவர்களெல்லாம்
எந்த வாத்திய
இசைக்குப்  பின்னால்
ஓடிப் போனார்கள்!


                                       *