மலைத்தேன்

சுரேஷ் ராஜகோபாலன்

மை தீர்ந்த என்
பேனாவுக்குத் தானே ​தெரியும
எனக்கும் தெரியாமலே
எத்தனை முறை
ஒரே கவிதையை – என்
கை எழுதியிருக்கும் என்று..

வார இதழ் போட்டிக்கும்
போனதே தவிரப்
பதிலொன்றும் வரவில்லை

அத்தனையும் திருப்தி
தராததால் கசக்கி
எரியப் பட்டன,
நொந்து நூலாகின

இனிக்கவிதை எழுத மாட்டேன்
முடிவுக்கு வந்த பின்னேதான்
பரிசு பெற்ற
செய்தி கிடைத்தது
அதுவும் அந்தக் கவிதையே
என்றறிந்த பின்னே மலைத்தேன்.

2 Comments on “மலைத்தேன்”

Comments are closed.