
நல்ல கவிதை
ஒன்றை எழுதுங்கள்
நான் நல்ல கவிதையைப் படித்து
ரொம்ப நாட்கள் ஆகிறது.
உண்மையைச் சொல்லுகிறேன்
இப்போது எழுதப்படுகிற
கவிதைகள்
எனக்குத் திருப்தியைத் தருவதில்லை
அவற்றில் ஏதோ
தடுமாற்றம்
இருப்பதாகப் படுகிறது
நான்
தினமும் ஒரு நல்ல
கவிதையை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன்
என்னாலும் எழுத முடியுமாவென்று பார்க்கிறேன்
எனக்கு வேண்டியது
ஒரு நல்ல கவிதை…

இன்றைய கவிதைகள் வதை.