
1) கொண்டா…கொண்டா..என்கிறது நாக்கு….
மொறு…மொறுவென்று…தங்கத்தை வார்த்ததுபோல்…
இணையான தொட்டுக் கொள்ளும் வகையோடு…
தோசைக்கு இணை உண்டோ.
2) எட்டி…எட்டிப் பார்க்கிறேன்
மாவிருக்கிறதா…?
இந்த நாக்கு வெட்கம் அறியாதது…
இது எத்தனையாவது அவளிடம் கணக்கிருக்குமோ…
தோசைக்கு இணை உண்டோ..!
3) தோசைக் கணக்கில் அதிகம் ஆண்களுக்குத்தான்.
உண்டி சுருக்குதல் பெண்டிருக்கு அழகாம்.
இன்னொரு தோசை கேட்டால்
இதுதான்பதில்..
தோசைக்கு இணை உண்டோ..
4) கவிஞர் வீட்டில் இன்று தோசை…
தட்டில் வந்ததும் ஈற்றடி தோன்றிவிட்டது…
மாவாட்டும் துன்பம் அவருக்கில்லை… ஆனாலும்..
தோசைக்கு இணை உண்டோ…!
5)எல்லாவற்றையும் நானே தின்றாகிவிட்டது…ஆனாலும்
அவளுக்கு இருக்கிறதா என்று கேட்டிருக்கலாம்தான்….
கடைதோசை அவளுக்குப்
பிடிக்காது…பைத்தியம்
தோசைக்கு இணை உண்டோ.
♦.

Superb…..
ஆஹா. தோசையிலும் காதல். அருமை
ஆஹா. தோசையிலும் காதல். அருமை