இரு கவிதைகள்/சுரேஷ் ராஜகோபால்

இரைச்சல்

மௌனம் இரைச்சலாக
இருந்ததே என்?
வித்தியாசம் தெரியவில்லை
ஒன்றும் புரியவில்லை
கெஞ்சிக் கேட்டான் அமைதியிடம்
சிரித்துக் கொண்டே
மௌனமும் அமைதியும்
இரைச்சலில் சமாதியாயின.

புலம்பல்

வெயில் காலத்தில்
சூடு பற்றிப் புலம்பினோம்
மழைக் காலத்தில்
துணி காயவில்லை
என்றே புலம்பினோம்
புலம்பலுக்குக் காரணம்
தேவையா என்ன?

17/07/2023