தோசைக்கு உண்டோ இணை/இலத்தூர் கி.சங்கரநாராயணன்

1.கல்தோசை அடுக்கிவைத்து கெட்டித்தயிர் மிளகாய்ப் பொடி
பல்வித சட்னியும்
பறக்கும் ஆவிச்சாம்பாரொடு
செல்லும் சுகமாய் பசி வயிற்றுக்குள்
தோசைக்கு உண்டோ இணை .

2.தோசைக்கிட்டன் என்று என்னை கேலிசெய்து அழைத்தாலும்
ஆசை தூண்டும்
அம்மா தோசை
மீசை மீது ஒட்டும் தயிர்
வீசை எண்ணெய் விட்டு வார்த்த
தோசைக்கு உண்டோ இணை.

2 Comments on “தோசைக்கு உண்டோ இணை/இலத்தூர் கி.சங்கரநாராயணன்”

Comments are closed.