
தோசை எத்தனை தோசையடி
காலையில் சாதா தோசை, மாமனுக்கோ மசாலா தோசை,
மாமிக்கு மைசூர் மல்லி தோசை,
பிள்ளைக்குப் பொடி தோசை,
பெண்ணுக்கு புதினா தோசை
கண் அவருக்கு
கல் தோசை
மிஞ்சியது எனக்கு வழித்த மாவு தோசை!
தோசை மாவு இருந்தால் ஆள் பலம்.
இன்று தோசை
நாளை ஊத்தப்பம்
மறுநாள் பொடி தோசை.
அப்பப்பா என்ன சுகம்?
நிலா போல வட்டம்
நிமிஷத்தில் செய்து விடலாம் தோசை.
பெயர் மாறி,உரு மாறும் மெருகு ஏறும்,ஆனால்
தோசைக்கு இணை ஏது?
