
1.பத்திருபது நாட்கள்
வடக்கத்தியூர் சுத்தலில்
முப்பொழுதும்
சுக்கா ரொட்டி படையலில்
ஊரடைந்த நள்ளிரவிலும் கிடைத்த வீட்டு
தோசைக்கு உண்டோ இணை
2.வடக்கத்தி ரயிலில்
சக தமிழ்ப்பயணி
வீட்டுப் பொட்டலம்
பிரித்து எனக்களித்த
வாழையிலை பொதி மணக்கும் வீட்டுப்பொடி
தோசைக்கு உண்டோ இணை
3.மாட்டுங்கா சாரதா பவனில் பசியடக்கி
வரிசை காத்து நிற்கையில் அமர்ந்தவன்
தட்டில் மின்னும் சட்னி சாம்பார்
தோசைக்கு உண்டோ இணை
4.கல்தோசை ஆர்வத்தில்
நான் வார்த்த
தோசை ஒன்று
சட்டுவப்போரில் உருமாறி
உருண்ட ரோல் தோசையாக அந்த
தோசைக்கு உண்டோ இணை
5.நைட் டூட்டி முடித்து காலனி
தெருநாய்கள் கடியின்றி பத்திரமாய் வீடடைய
புண்ணிய கிருபை செய்த கேண்ட்டீன்
தோசைக்கு உண்டோ இணை.
…
20/07/2023
மாலை மணி : 06:17
