
நித்திரைக்குள்
நின்ற நிலவில்
தஹித்தது தணல்.
நிலவோ,’ நான்
நெருப்பல்ல இங்கே பளிச்சிடுவது
புழுதிக்கடல்’ என்று
பசப்பிற்று.
நித்திரைக்குள்
திரைத்த கடலில்
எரிமலைப் பிழம்பு
கடலோ ‘நான்
கரிப்பேன் உப்பாய்
எரித்து அறியேன்.
இந்தப் பிழப்பு
நிலவின் வம்பளப்பு’என்று இளித்தது.
நித்திரைக்குள்
நித்திரை அமிழ்ந்து
பரி தீ பிறந்தது.
பசப்பல் இளிப்பு இரண்டையும் கிழித்தது. நிலவின் மீது
பிளந்து கிடந்த
கடலுக்குள்
எரிந்தது தீயின்
கள்.
