
அடர் இருளில் சிதறி
விழுந்த துளிகளைக்
கோர்த்து எதிரொளிக்கிறது!
சாளரத்தின் வழியே…
எட்டி நின்று கண் சிமிட்டும்
நட்சத்திரப் பூக்கள்!
கோபுர வாசலின்
மேல் மாடத்தில்
யாரையோ தேடி….
மறைந்து மறைந்து செல்கிறது
வெண் மேகக் கூட்டம்!
மின்மினிப் பூச்சிகளின்
வெளிச்சத்தில் இன்னும்
அழகாகத் தெரிகிறது
பெரு வனத்தின் அடர்வு!
மீண்டும்…!
ஒரு நிலாக்காலம் வேண்டும்!
ஊர்க் குளத்தில் காத்திருக்கின்றன
அல்லி மொட்டுகள்!
இன்றும்….!
நாவல் மரத்தின் கிளைகளில்
உயிரற்ற ஒரு கூடு…?!
யாருமற்று வாழ்கிறது!
இப்படி… இவை அனைத்தையும்…!
அள்ளி எடுத்துப் பருகிக்
கொண்டே செல்கிறது
நாழிகையின் பின்னே..!
பேரண்டத்தின் பிரமாண்டம்!
சாயல்கள் ஒத்துப் போகின்றதா?
பின் தொடர்ந்து….
கொண்டே இருக்கின்றன…!
ஒத்திகைகளைப்…..
பார்த்த வண்ணம்…
“நிஜங்களைத் தேடும் நிழல்கள்”!
