தீபாவளி

செல்விபிரகாஷ்

அசுரத்தையொழித்து அகல்விளக்கேற்றிடுவோம்.
அகத்ததை திறந்து
அன்பால் நிறைத்திடுவோம்.

மனதினொரு வண்ணத்தை
மலர்களால்தொடுத்திடுவோம்.
மனிதத்தை உயர்த்தி
மாசுகளை மத்தாப்பிலெரிப்போம்

சாத்திரக்குப்பைகளை
சரவெடியாய் நாம் வெடிப்போம்
சர்க்கரையின் நினைவுகளை
சக்கரத்தில் சுழற்றிடுவோம்.

அழுத்தத்தின் மனமதனை
அதிரசத்தில் பிழிந்திடுவோம்
அசர்த்திடும் சிக்கலதை
அரிசிமுறுக்காக்கி உண்போம்

பகுத்தறிவை பாகெடுத்து
பக்குவத்தின் சுவையுணர்வோம்
பாங்குடனே பாசத்தை
பண்டமாக்கி நாம் சமைப்போம்.

தீஞ்சுவையின் தேனெடுத்து
திருக்குறளின் வழியெடுத்து
திகட்டாத தித்திப்பில்
தீபாவளிக் கொண்டாடிவோம்.