அலங்கார அம்மன் கண்/கலைச்செல்வி


பூரத்தில்
பூரண அலங்காரத்தில் ஜொலிக்கிறாள்
கரையூர் காளியம்மன்

அம்மனைப் பார்க்கிறேன்
பதினெட்டு வயதில்
பார்வையிழந்த பார்வதி அக்கா அலங்கரித்தால் இப்படித்தானிருப்பாளோ
என்பது நிழலாடுகிறது நினைவில்..

நிழலாடுவதெல்லாம்
நிஜமாகிவிடுவதில்லை
நிஜமானதெல்லாம்
நிழலாடுவதில்லை.

விட்டுத் தள்ளுங்கள்
எனக்கு இன்றைக்குத்
தெரிந்தது
அம்மனுக்கு இத்தனை நாள் தெரியாமலா இருந்திருக்கும்.?


28.7.2023

2 Comments on “அலங்கார அம்மன் கண்/கலைச்செல்வி”

Comments are closed.