இனிக்கும் தமிழ் -188/டி வி ராதாகிருஷ்ணன்

சகலகலாவல்லி மாலை

குமர குருபரர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.

மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மதுரை கலம்பகம், நான் மணிமாலை,
செய்யுட்கோவை, மும்மணிக் கோவை போன்ற சிறந்த நூல்களை எழுதியுள்ளார்.

அவர் எழுதிய சகலகலாவல்லி மாலை, சரஸ்வதியை பற்றி எழுதியது.

மிக மிக எளிய தமிழில் எழுதப்பட்ட சுகமான பாடல்கள்.

இப்போது ஒரு பாடல்

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

பொருள்

இந்த மண் பார்த்த வென் கொற்ற குடை கீழாக அரசு செய்யும் பெரிய
மன்னர்களும்,என்னுடைய பாடலைக் கேட்ட உடன்..அவர்களை என்னிடம் பணியச்செய்வாய்…பிரம்மன் முதலாக விண்ணில் உள்ள தெய்வங்கள் பல கோடி உண்டென்றாலும்,சொல்லப்போனால் உன்னைப்போல நேரில் கண்ட தெய்வம் இருக்கின்றதா? (இல்லை)அனைத்து கலைகளிலும் வல்லமை உள்ளவளே!

       -