படிகள்/ஷண்முக சுப்பையா

இன்றெல்லாம்
அழுதழுது
இருக்கும் நான்
அன்றெல்லாம்
சிரித்துச் சிரித்துச்
செத்தவனே.
இனி நான்
அழுகை விட்டு
அடுத்தபடியாக
சிலரைப்போல்
ஆந்தையென
பேந்தப் பேந்த
விழித்திடுவேனோ?