காலத்தை தாவிப்போகிற லாவகம்/கலைச்செல்வி

வெகு நாட்களுக்குப் பின் தவளையைப் பார்க்கிறேன்
இப்போதெல்லாம் தவளையைப் பார்ப்பது கொஞ்சம்
அரிதாகிவிட்டது.

மழைக்காலத்தில் கத்துகிற சத்தம் இல்லை
எதற்காவது இரையாகித் துடிக்கிறபோது
இரைஞ்சுகிற குரல் இல்லை
இணையோடு கொஞ்சி கொண்டு சாலையில் கிடக்கிற
அந்தக் காட்சியும் இல்லை

மாறிக்கொண்டே இருக்கிறது எல்லாமும்
எல்லோரும் பழகிக் கொண்டார்கள் எல்லாவற்றுக்கும்.

வழிதவறி வந்துவிட்ட
தவளையை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்
அது என்னைப் பார்க்கவில்லை
வேறு யாரையும் பார்க்கவில்லை.

இயல்பாய்த்
தாவித் தாவிப் போகிறது
இந்தக் காலத்தை
எப்படியாகிலும்
கடந்து விட நினைத்து.

1.8 2023