செ.புனிதஜோதி கவிதை

சாலையோரத்தில்
பேசிக்கொண்டே
செல்லும்
பெண்மணியின்
செவிகளில்
பொருத்திய
ஹெட்போனை
கவனிக்கவில்லை
ஆனாலும்
ஒன்று கவனித்தேன்
அவள் முகத்தில்
மலர்ந்து மறையும்
நவரச மலர்களை.