எருமை ஏன் கத்திக்தொலைக்கிறது/அழகியசிங்கர்

என்பா 149

எருமை ஏன் கத்திக்
தொலைக்கிறது

காலையில்
மடிப்பாக்க மொட்டைமாடியில்
நடந்து

கொண்டிருந்தேன்.
தூரத்தில் குட்டையில்
எருமைமாடுகள்.

ஒன்றுமட்டும் கத்திக்கொண்டிருந்தது


என்பா 150

எருமை ஏன்
கத்தித் தொலைக்கிறது

எப்போது எத்தனை
மணிக்கு வந்தன

குட்டைக்கு. ஒன்றுமட்டும் நிச்சயம் குட்டையில்

தடுமாறும் எருமை மாடு


என்பா 151

எருமை ஏன்
கத்தித் தொலைக்கிறது
கத்தினால் என்ன
கத்தாவிட்டால் என்ன
என் காதை
கத்தல் குடைகிறது
பாவம் அந்த ஜீவன்

One Comment on “எருமை ஏன் கத்திக்தொலைக்கிறது/அழகியசிங்கர்”

Comments are closed.