
( 1)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?
“கொசுத் தொல்லை தாங்க இயவில்லை;
சற்றேனும் தொழுவீட்டை துப்புரவு
செய்யலாகாதா?”
என்று அது கேட்கிறது.
(2)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?
விற்று விட்டேன் அதை; காசுக்காக;
பிரிவாற்றாமை துயருடன் அது கத்துகிறது.
நானும் துயருடன் கண்ணீரில்.
(3)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?
என் துயரம் எவர் அறிவர்?
எந்நேரமும் ஏச்சும்,
பேச்சும்; நான்
அளிக்கும் அமுதம் கசக்கிறதா?
. (4)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?
என் கண்ணாடி கண்கள் வனப்பானதே!
என் மின்னும் கருமை பொலிவானதே!
என்னிடம் ஏன் அருவெறுப்பு?
(5)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?
தவறாமல் தவிடும் புண்ணாக்கும் வைக்கும்
கோனார் இன்னும் வாராத வருத்தம்தான்;
வேறென்ன இருக்கக் கூடும்
6)
எருமை ஏன் கத்தித் தொலைக்கிறது?
எத்தனை நேரம் குட்டையில் நிற்க?
வைக்கோல் பிரி
காய்ந்து விட்டது;
அவளுடன் பேசி முடியவில்லையா?

Arumai