வாய்ச் சொல் வீரனடி/சுரேஷ்ராஜகோபால்

04 08 2023


வாய்ச்சொல் வீரனடி


விண்ணை முட்டுமளவுக்கு
வீம்பிருக்கும்: ஆயினும்
கண்ணை தீறந்து முன்னே
பார்க்காது பிடிவாதமாய்
சின்னஞ்சிறு சுழலை
சுட்டிக்காட்டி இதுதான்
மின்னலென வாதிப்பான்
வாய்ச் சொல் வீரனடி.

கருப்பு வண்ணத்தை
வெள்ளை என்பான்
வெள்ளைய கருப்பென்றே
வாதிடுவான் வார்த்தையாலே
நின்ற இடத்தில்
வானத்தை வளைத்ததாக
வம்புக்கப் பேசிடுவான்
வாய்ச் சொல் வீரனடி.

செம்புதனை காட்டியே
தங்கம் என்றிடுவான்
காம்பினில் தேன்
வடியுது என்றே செப்பிடுவான்
உள்ளத்தில் ஒன்றும்
உதட்டில் ஒன்றும் வைத்து
உறவாடியே ஏய்த்திடுவான்
வாய்ச் சொல் வீரனடி.

>
-சுரேஷ் ராஜகோபால்

One Comment on “வாய்ச் சொல் வீரனடி/சுரேஷ்ராஜகோபால்”

Comments are closed.