இரு கவிதைகள்/நாகேந்திர பாரதி

நேற்றைய ‘ சொல் புதிது ‘ நிகழ்வில் சொல்ல நினைத்த கவிதைகள்
——-
அஞ்சறைப் பெட்டி
————————–——
பிறந்த வீட்டின்
பெருமை உணர்வு

நாத்தனார் மாமியார்
நர்த்தன நாடகம்

இரண்டும் கெட்டான்
கணவன் பார்வை

ஏங்கும் அன்பின்
இரைச்சல் சப்தம்

எல்லாம் போட்டு
மூடி வைக்க

அடுப்படி அறையில்
அஞ்சறைப் பெட்டி

———-

அக்னிச் சூடுகள்
—————————-
தம்ளர் ஒன்று தூக்கில்
தொங்கும் தனியாக

குற்ற உணர்ச்சியின்றிக்
கடந்து போவார் பலர்

குளிர்ந்த தம்ளர் தான்
கொதிக்கும் உள்ளே

தம்ளரின் உள்ளே
தகிக்கும் பகையின்

அக்னிச் சூட்டின்
வெப்பம் வெளியேறும்

————