வலையில் சிக்கியவைகள் – II/அதிரன்

சென்ரியு க்கள்

சென்ரியு அல்லது நகைத்துளிப்பா என்பது ஜப்பானில் உருவான ஒரு கவிதை வடிவமாகும். ஐக்கூவைப் போன்ற இது அதன் பகடி வடிவமாகும். ஒவ்வொரு கவிதையும் ஐந்து ஏழு ஐந்து எனும் அசைகளைக் கொண்டிருக்கும். ஈரோடு தமிழன்பனின் ‘ஒரு வண்டி சென்ரியு’ எனும் நூல் தமிழில் எழுதப்பட்ட சென்ரியு நூலுக்கு நல்லதோர் உதாரணமாகு

மாக்கூ சுகே என்னும் முன்ஒட்டு கவிதைக்கு எழுதப்படும் தொடர் கவிதைகளை தேர்ந்தெடுப்பதில் திறம் பெற்றவராக காரை சென்ரியு விளங்கினார். ஆகையால், காரை சென்ரியு பெயரில் உள்ள சென்ரியு என்னும் சொல்லே இக்கவிதைகளுக்குப் பெயராக வழங்கப்படுகின்றது.   பெயராயிற்று  என்று கூறுகிறார்.

ஹைக்கூ – சென்ரியு வேறுபாடு :

ஹைக்கூவும் சென்ரியுவும் சப்பானிய  இலக்கியமாக இருப்பினும் இரண்டும் உள்ளடக்கம் மற்றும் பாடுபொருள் ஆகியவற்றால் வேறுபட்டுக் காணப்படுகின்றது.

ஹைக்கூ இயற்கையைப் பற்றி ஆழ்நிலை ஜென் தத்துவங்களுடன் பாடுகிறது. இதனை,

‘அழகிய வண்ணத்துப்பூச்சி
பறக்கும் திசையெல்லாம்…
உடன் பறக்கும் மனசு’

என்னும் ஹைக்கூ வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. இயற்கையின் தரிசனம் மற்றும் தத்துவ நிலை ஆகியவற்றுடன் இரண்டற கலந்த நிலையில் ஹைக்கூ கவிதைகள் படைக்கப்படுகின்றன.

சென்ரியு கவிதைகள் மனித நடத்தைகள், சமூக அவலங்கள் மற்றும் அரசியல் போக்குகள்  ஆகியவை குறித்து  பாடுகின்றன. இதனை,

‘சாக்கடையில் ரொட்டித்துண்டு
மொய்த்துக்கொண்டிருக்கின்றன
பசித்தவனின் கண்கள்’

என்னும் ஹைக்கூ கவிதையின் வாயிலாக அறியமுடிகின்றது. மக்களிடத்தில் பொருளாதாரத்தில்  ஏற்பட்டுள்ள ஏற்றத்தாழ்வு நிலைகளால் வறுமையில்  உணவில்லாதவனின் நிலைக்குறித்து  இக்கவிதை வெளிப்படையாக எடுத்துரைப்பதாக அமைகின்றது.

ஹைக்கூவில்  இயற்கைச் சார்ந்த பருவக்கால குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஹைக்கூ இயற்கை மற்றும தத்துவம் சார்ந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. ஆனால், சென்ரியு கவிதைகள்   எவ்வித கட்டுபாடுகளுக்கும் உட்பட்டவை இல்லை. ஹைக்கூ கவித்துவம் நிறைந்து மறைப்பொருள் தன்மையுடன் படைக்கப்படும் கவிதை. சென்ரியு கவித்துவம் குறைந்தும் சில இடங்களில் கவித்துவம் இன்றியும் காணப்படுகின்றது. இவ்வாறு ஹைக்கூவும் சென்ரியுவும் பாடுபொருளாலும், உள்ளடக்க அடிப்படையிலும் வேறுபட்டு நிற்பதைக் காணமுடிகின்றது.

நன்றி
உங்கள் அதிரன்
ஓசூர்

 –