பாஷோ ஹைக்கூ இதழ்

தொகுத்தவர் : அதிரன்

இன்று ருசித்த ஹைக்கூ கவிதைகள்
எண் 220

கூரைக்குள் நுழையும் வெயிலை
தொட்டு விளையாடுகிறது
குட்டிப் பூனை
– ஜா.பிராங்க்ளின் குமார்

என்ன சொல்லி அனுப்ப
வீடு வந்திருக்கிறது
விற்ற ஆடு

  • ஏகாதசி

வெயில் விலகிய பின்
செடிக்கே திரும்பியது
அதன் நிழல்

அஸ்தியைக் கரைக்கப்போகிறேன்
இனி கடல்தான்
என் அம்மா

  • அய்யப்ப மாதவன்

என் பார்வையை
இழுத்துச் செல்கிறது
சுவரேறும் கட்டெறும்பு

  • நாணற்காடன்

கோடு வரைந்து கொள்வேன்
இரவு வானில்
வரிசையாய் மூன்று நட்சத்திரம்

  • பட்டியூர் செந்தில்குமார்

மீன் விற்கப்படுகிறது
அவ்வப்போது
தண்ணீர் தெளித்து

  • துரை நந்தகுமார்

வீட்டில் யாருமில்லை
இரண்டு கோப்பைத் தேநீர்
கலக்கிக் கொண்டிருக்கிறேன்

  • ச.துரை

வண்ண மீன் தொட்டி
உள்ளேயும் வெளியேயும்
முத்தத் தடங்கள்
_வைகறை

அணிலைப் பிடிக்க ஓடும் குழந்தை அணிலாக்குகிறது
பார்ப்பவர்களை எல்லாம்

  • பா. மீனாட்சி சுந்தரம்

காலம் காலமாய்
சென்று கொண்டிருக்கிறது நதி
அதே பெயருடன் அங்கேயே இருந்துகொண்டு
– – -மணி சண்முகம்

நன்றி :