பாஷோவின் ஹைக்கூ கவிதைகள்

தொகுத்தவர் : அதிரன்

வசந்த மழை
கூரை வழியாகக் கசிவு
சொட்டும் குளவிக் கூடு

ஒரு தேனீ
தள்ளாடி விழுகிறது
வெளிர் சிவப்பு மலர்ச் செடியிலிருந்து

ஒரு சிள்வண்டு
தன்னைப் பற்றியே பாடியது .
முற்றிலும் மாறுபட்டு..

ஒரு வயோதிக கிழவன்
மெதுவாக உண்ணுகிறான்
முள் மீன்

காலைத்தேநீர் அருந்தும் துறவி
சாமந்திப்பூ மலர்வது போல்
அமைதி

வாழைமரத்தின்
காற்றில் கிழிந்த இலைகளிலிருந்து
வாளியில் கொட்டும் மழைத்துளிகள்

அந்தப் பட்டாம்பூச்சி மணக்கிறது
அதன் இறக்கைகளில் வாசனை
மந்தாரை மலர்கள்