வீட்டிற்குள் நுழைந்த வானம்/சீ.பாஸ்கர்

பட்டம் விட்டு
விளையாடிக்கொண்டிருக்கும்
சிறுவர்கள்
வீடு திரும்புகையில்
மறக்காமல் எடுத்துக்கொண்டு
வந்துவிடுகின்றனர்
அவர்களின் வானத்தையும்