
ஊர்க் கிணற்றின்
உள்ளே சுழன்றாடும்
பாதாள சோதியின்
பத்துக் கைகளில்
சிக்கிக்கொண்டு ஒவ்வொன்றாய்
மேலே மேலே வருகிறது
.கைதட்டலும் கூச்சலும் நாலாந் தெருவுக்கு எட்டுகிறது..
கட்டங்கடைசியாய்
சேறு பூசிஇற்றுப் போனரோசாப்பூ கலர் தாவணிதலைநீட்டுகிறது
மெதுவாய் மிக மெதுவாய்….
துர்மரணம் ஒன்று சாட்சியோடு
இருள் அப்பிச்செல்கிறது
எல்லார் முகங்களிலும்
சட்டென்று.
நிம்மதியாகிறது கிணறு
வெகு காலம் கழித்து
8.8.2023
