ஜீவனில்லா ராமசாமி

கவிஞர்.செ.புனிதஜோதி

எலும்பும் தோலுமாய்
ஜீவனை மட்டும்
தாங்கிநிற்கும்
பெரியவரின்
உருண்டு நிற்கும்
வெள்ளை வேட்டியும்
கிழிந்துவிடக் காத்திருக்கும்
வெள்ளைசட்டையும்
யாரும் சொல்லாமலே
வறுமையின் முகவரியை
எடுத்துக்காட்டியது…

நிறைமாத மகளை
அழைத்துவந்து அரசுமருத்துவமனைக்குள்
சேர்த்துவிட ஆயிரத்தை
கைமாத்தா வாங்கிவர
ஆயிரம் முறையாவது
செல்லப்பன் வீட்டுக்கு
நடையாநடந்திருப்பாரு…

ஒருநொடிக்குள்ள ஆயிரம்
மறைஞ்சு போன மாயத்த
எண்ணி அரசுமருத்துவமனையில்
இலவசம் பெயர் பொரித்த
பலகையே வெறித்தேப் பார்கிறார்
ஜீவனில்லா
ராமசாமி

One Comment on “ஜீவனில்லா ராமசாமி”

Comments are closed.