🌷க.சோமசுந்தரி.
நினைவுகளின்
பெரும் சுமையில்…
இன்றும்!
தனியே விடபட்ட மனது
பேசி சென்றது!
கடந்த நெடுந்தூரப் பயணத்தில்…
திரும்பி நடக்க முடியாமலேயே
வாழ்வில்…
பூக்களாய் உதிர்கிற சில தருணங்கள்!
வாழ்ந்த காலத்தில்
அனுபவங்களை கடந்தும்… நேற்றைய மிச்சத்தின்
எச்சங்களாய் சுவடுகளை
பதித்த சென்ற
தடங்கள்!
அன்போ…
அனுசரணையோ..
எதுவுமற்ற வெற்றிடத்தில்
சூழ்நிலை தான் நிர்ணயிக்கிறது
மனிதனின் வீழ்ச்சிகளில்
உண்மை எதுவென்று?
இப்படித் தான்! இன்றும்!
பிரபஞ்சம் காத்துக் கொண்டே இருக்கிறது…?!
எந்த நிர்ப்பந்தகளும்
அற்ற எதிர்பார்ப்புகளும்
இல்லாத… வெண்தாமரையின் இதழாய் விரியும்
ஒற்றை துளியில்
உயிர் நனையும்
அந்த அன்பின்
உண்மை பக்கங்களும்
ஈரமான மனிதர்களும்
இங்கே எவையென்று?!
