உறவுகள்/விஜயலட்சுமி கண்ணன்

அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். ஒன்றும் புரியவில்லை. தான் எங்கு இருக்கிறோம், எப்படி இங்கு வந்தோம், இது என்ன இடம், எதுவுமே புரிபடவில்லை.
தேவியின்
கண்களில் பீதி தெரிந்தது. மிரண்டு போய் உட்கார்ந்து விட்டாள்.
அவளை அங்கே உட்கார வைத்து விட்டு அந்த அறையின் ஜன்னல் கதவுகளை சாத்திவிட்டு அருகே வந்து அமர்ந்த அந்த முதியவர்,
“நீ இன்று இரவு வரையிலும் இங்கேயே தங்கி இரு. வெளியே எங்கும் செல்ல முயலாதே.” .என்று சொல்லி விட்டு உள் பக்கம் சென்று ஒரு தட்டில் இரண்டு கோப்பைகளில் தேநீருடன் வந்தார்.
“உன் பெயர் என்ன?”
“தே..வீ…”வார்த்தைகள் நடுங்கிய படியே வெளி வந்தன.
முதிவரின் மீசையைப் பார்த்தால சினிமாவில் வரும் வில்லன் போல தெரிந்தது.
தேநீரை வாங்கிக் கொண்ட போது இவர் யார்,நம் மீது இரக்கமா இல்லை வேறு எந்த எண்ணத்தோடு செயல் புரிகிறார்?
குழம்பித் தவித்தாள் தேவி.

“பெரியவரே,என்னை எதற்காக இப்படி இங்கே கூட்டி வந்து இருக்கிறீர்கள்?”

“சத்தமாக பேசாதே.
நான் உன்னை காப்பாற்றி பாதுகாப்பாக இங்கே தங்க வைத்திருக்கிறேன். நீ கவலைப் படாதே. நீ என் மகள் போல்.”என்றார் முதியவர்.

தேவி சற்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
ஆனாலும் ஒரு பயம் நெஞ்சை கவ்வி இருந்தது.
மன அழுத்தம் மற்றும் உளைச்சல் காரணமாக தன்னை மறந்து உறங்கி விட்டாள்.
விழித்து பார்க்கும் போது அவள் அடியில் ஒரு புல் பாயும் தலைக்கு தலைகணையும் இருந்தது.
பக்கத்தில ஒரு பழைய முக்காலியின் மீது உணவு தட்டு,அதை வாழை இலை கொண்டு மூடி வைத்து இருந்தது.

பாவம், நல்ல மனிதர், தப்பாக நினைத்து விட்டேனோ?.
ஆனால் சரியான விடை கிடைக்கவில்லை.

காலை நான்கு மணி இருக்கும்.
பக்கத்து அறையில் படுத்து இருந்த பெரியவர்
“தேவிம்மா, புறப்படு.உன்னை வீட்டில் கொண்டு விட்டு எல்லாம் விவரமாக சொல்கிறேன்”

வாசலில் டிராவல்ஸ் காப் நின்று கொண்டு இருந்தது.
“தேவிம்மா,
போகும் போது காரில் எதுவும் பேச..வேண்டாம்.
என்னை பெரியப்பா என்று அழைத்துக் கொள்.”
“சரி “என்று மிரள மிரள நோக்கித் தலையை அசைத்தாள் தேவி.
வண்டி புறப்பட்டது.
சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில், இராமானுஜம் டவுனுக்கு அருகில் வலது திரும்பி தேவி காட்டிய வீட்டின் முன் காரை நிறுத்தி விட்டு தேவியும் பெரியவரும் இறங்கி உள்ளே போனார்கள்.

தேவியின் தந்தை குமரேசன்
ஆச்சர்யத்தோடு இருவரையும் பார்த்தார்.
“சபா? நீ எங்கே இங்கே?தேவியோடு? நீ எங்கே இருந்தாய்?”
கேள்விகளை கோர்வை இன்றி கேட்டார்.
சபேசன்
குமரேசனுடன் பிறந்த மூத்த சகோதரன். இருவரும் இணைந்து ஊரே இராம லக்ஷ்மணன் என்று புகழ்ந்த காலம் மாறி சபேசன்
சித்தியின் கொடுமைத் தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
முப்பது ஆண்டுகளுக்கு பிறகு சகோதரர்கள் சந்திக்கிறார்கள் அதுவும் வித்யாசமான சந்தர்ப்பத்தில்.
தேவி சென்னையில் ஹாஸ்டலில் தங்கிப் வேலைக்கு சென்று வந்தாள். மேலும் வீட்டில் இருந்தால்,
அவளுக்கும் சித்தியின் தொல்லை அதிகம்.அப்பா குமரேசனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவ்வளவு தூரம் தினம் பயணம். செய்யவும் முடிய வில்லை . ஹாஸ்டல் சூழ்நிலையின் தாக்கம் அதிகமாக இருந்தது. அவள் தன் வாழ்க்கையை முடித்து கொள்ளலாம். என்று தீர்மானித்து
அடையாறு
பாலத்தின் ஓரம் நின்று குதிக்க முற்பட்டபோது இரண்டு முரட்டு கைகள் அவளை பின்னோக்கி
இழுத்தது.அவள் கண்களைக் கட்டி காரில் ஏற்றி அந்த பழைய வீட்டில் பத்திரமாக வைத்து இன்று அவள் வீட்டில் கொண்டு விட்டார்.

சபேசனுக்கு தேவி யார் என்று தெரியவில்லை என்றாலும் அவர் மனதில் ஒரு நெருடல்.
அவருடைய பதினாறு வயது நிரம்பிய அன்பு மகளை கொரோனா கொடிய நோய்க்கு பறி கொடுத்து பித்துப் பிடித்தவர் போல இருந்தவருக்கு அடையாறில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று திரும்பி வரும் போது அவர் கண்ணில் பட்டது தேவி பாலத்திலிருந்து குதிக்க முற்பட்ட காட்சி.
தேவி உண்மையிலேயே மிரண்டு போய் இருந்தாள்.
சபேசன் நிஜமாகவே அவளுடைய பெரியப்பா என்று அறிந்து மகிழ்ந்தாள்.
“உன் பெண்ணை உன்னிடம் ஒப்படைத்து விட்டேன், குமரேசா.
நான் வருகிறேன்.”
குமரேசன் பேச அவர் காத்திருக்க வில்லை.