கேள்விக்காரன் கவிதை

முட்டு வலியுடன்
முட்டி மோதி இலக்கிய
வீரச் சமரிடும்
கொடாக் கண்ட சோழன்
நீடு வாழ்க

முட்டு வலி
முதுமை தரும்
அவ்வைக் கை
சுடு நாவல் கனி

தடை தடங்கல்
மணல்துகள்
ஊதித் தள்ளி
உள் கனிச் சுவை
உண்பாய்
நவீன விருட்ச
தமிழ் ஓதி…

முட்டு வலி
அறுவை சிகிச்சை
உலோக மூட்டு
உட்பொருத்தல்
அது
உடல் சேர்தல்
பயிற்சி
வலி ரண அப்பியாசம்

ஆயினும் என்ன‌
அறை முடங்கல்
ஆயுள் ரணம்

ஆதலின் உலோகக் காலோடு ஓடு கண்மணி

போட்டி பரிசு
எல்லாம் வேண்டாம்

உன் இருப்பு
உணர்த்து

அதுதான் ஆகச் சிறந்த
விருது


10/08/2023
நண் பகல் மணி : 12:11

2 Comments on “கேள்விக்காரன் கவிதை”

Comments are closed.