
எழுத்தாளர்
பத்திரிகை ஆசிரியர்
தமிழ்நாடு
வேலூர் மாவட்டம்
ஆற்காடு அருகே உள்ள
மாம்பாக்கம்
என்ற கிராமத்தில்
(10-08-1916) அன்று பிறந்தார்
தகப்பனார் பெயர்
சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகள்
தாயார் பெயர்
மங்களம்
விடாக்கண்டன்
சாவி
ஆகிய புனை பெயர்களில்
எழுதி இருக்கிறார்
சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்
தந்தையின் பெயர் முதல் எழுத்து “சா’வுடன்
தன் பெயர் முதல் எழுத்து
“வி’யும் சேர்த்து
“சாவி’ என்று புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதினார்
கிராமத்தில் நான்காவது வகுப்போடு படிப்பை
நிறுத்திக் கொண்டார்
தன் ஊரில் இருந்தபடியே
கல்கியில்
அவ்வப்பொழுது
விடாக்கண்டர்
என்ற பெயரில் எழுதி வந்தார்
பின்னர் கல்கி ஆசிரியர் சதாசிவம்
சாவியை அழைத்து
உதவி ஆசிரியர் பதவி வழங்கினார்
இவர்
கல்கி
ராஜாஜி
காமராஜர்
ஆகியோர்களுடன்
நெருங்கிப் பழகும்
வாய்ப்பைப் பெற்றார்
கல்கி
ஆனந்த விகடன்
குங்குமம்
தினமணிக் கதிர்
போன்ற இதழ்களில்
பத்திரிகை ஆசிரியராக
வேலை செய்தார்
பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராக
வேலை செய்தார்
கல்கியில் இவர் எழுதிய
மாறு வேஷத்தில் மந்திரி
சூயஸ் கால்வாயின் கதை
போன்ற
நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது
ஆனந்த விகடன் இதழில் ஆசிரியராகி
வாஷிங்டனில் திருமணம்
என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார்
இந்த தொடர்
பெரும் புகழைத் தந்தது
ஆனந்த விகடனில்
சிறிது காலம்
பணியாற்றிய பின்னர்
குங்குமம்
தினமணிக் கதிர்
ஆகிய பத்திரிகைகளின்
ஆசிரியராக வேலை செய்தார்
பின்னர் சாவி
என்ற பெயரில்
வார இதழ் ஒன்றைத் தொடங்கி
பல ஆண்டுகள்
அதன் ஆசிரியராக
வேலை செய்தார்
சாவியின் எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளதால்
அவருடைய பல படைப்புகள் மின்னூல்களாகத்
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன
ஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள்
சிலருடன் சேர்ந்து தொடங்கினார்
கலைத் துறையிலும்
இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு
ஞானபாரதி விருதும்
பணமும்
அளித்துக் கௌரவித்து வந்தார்
இவர் எழுதிய நூல்கள்
வாஷிங்டனில் திருமணம்
விசிறி வாழை
வழிப்போக்கன்
வடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு
வேதவித்து
கேரக்டர்
பழைய கணக்கு
இங்கே போயிருக்கிறீர்களா?
ஊரார்
திருக்குறள் கதைகள்
கோமகனின் காதல்
தாய்லாந்து
உலகம் சுற்றிய மூவர்
ஆப்பிள் பசி
நான் கண்ட நாலு நாடுகள்
நவகாளி யாத்திரை
சிவகாமியின் செல்வன்
சாவியின் கட்டுரைகள்
சாவியின் நகைச்சுவைக் கதைகள்
தெப்போ 76
வத்ஸலையின் வாழ்க்கை
கனவுப்பாலம்
மௌனப் பிள்ளையார்
சாவி-85
நடத்திய இதழ்கள்
வெள்ளிமணி
சாவி
பூவாளி
திசைகள்
மோனா
சாவி எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா
நாரத கான சபா அரங்கில் சிறப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில் தன்னுடைய பழைய நினைவுகளை மேடையில் பேசிக் கொண்டிருந்த பொழுதே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
அங்கே சில மாதங்கள் நினைவின்றி இருந்த
சாவி
(09-02-2001) அன்று காலமானார்
பத்திரிகை உலகில்
ஒரு சாதனையாளர்
இவர்
ஆனந்தவிகடன் பத்திரிகையில்
வேலை செய்த காலத்தில்
இவருடன்
ஜெயகாந்தன்
தி ஜானகிராமன்
கு ப அழகிரிசாமி
தேவன்
போன்ற பல சிறந்த எழுத்தாளர்கள்
எழுதினார்கள்
மாலி
சில்பி
கோபுலு போன்ற
சிறந்த ஓவியக் கலைஞர்கள்
இருந்தார்கள்
எழுத்துலகில்
அது ஒரு பொற்காலம்
சாவியின் பிறந்த நாள் இன்று 👆👆
