
சாவி சார் திறமையானவர்களை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்….அதே சமயம் கோபம் வந்தால் ஒரேயடியாய் தூக்கிபோட்டுவிடுவார்….அவரிடம் எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்கமுடியாதது…அப்போது நான் பத்திரிக்கையில் முதல் அடி யெடுத்துவைத்த காலம்…சின்ன சின்ன தாக துணுக்கு ஓவியங்கள் வரைவேன்….அதை பக்கத்தில் வந்து பார்த்து ரசித்துவிட்டு சபாஷ்..என்று பாராட்டிவிட்டு அவரது அறைக்கு சென்றுவிடுவார்….ஒரு முறை துணையாசிரியர் சி. ஆர்.கண்ணன் சார் என்னை வெறுப்பேத்துவதாக நினைத்துகொண்டு நக்கல் செய்தார்…. எனக்கு செம கடுப்பாகவே அப்படியே வரைந்ததை போட்டுவிட்டு வீட்டுக்கு போய்விட்டேன்…வீடு அப்போது அயனாவரத்தில் இருந்தது…சாவி அலுவலகம் இருந்ததுஅண்ணாநகர் வெஸ்ட்…அப்போது போன் வசதி கிடையாது….நான் இருந்தது குறுகலான மார்க்கெட் தெரு…நான் நினைத்தேன் …..நாம என்ன பெரிய ஆர்ட்டிஸ்டா? நாம போகலைன்னா அவங்க ஒண்ணும் கண்டுக்கமாட்டாங்கன்னு….வீட்டுக்கு எப்பவும் மேட்டர் கொண்டுவருபவர் பிரான்ஸிஸ் என்கிற அட்டெண்டர்….நீங்க நம்ப மாட்டீங்க….என்ன நடந்த்து தெரியுமா…? இரண்டு நாட்கள் சென்றபின் என் தாயார் மார்க்கெட்டில் மீன் வாங்கிக்கொண்டு குறுகலான தெருவில் நடந்து வருகிறார்…என் அம்மாவின் பக்கத்தில் ஒரு கார் வந்து நின்றது….காரினுள் சாவி சார்…பின் சீட்டில் அட்டெண்டர் பிரான்ஸிஸ்…..அவர் சொல்கிறார்…..சாவியிடம் சார், இதுதான் அரஸோட அம்மான்னு….படக்கென்று கார் கதவை திறந்து கொண்டு இறங்கிய [அப்போது நான் வீட்டில் இல்லை] அம்மா..வணக்கம்மா..நான் ஆசிரியர் சாவி….உங்க பையன் ரொம்ப பெரிய திறமைசாலிம்மா….அங்க இருக்கவங்க ஏதோ பேசிட்டாங்க…நான் அவங்களை கண்டிச்சுட்டேன்….கோவிச்சுக்கவேணாம்னு சொல்லுங்க…..வந்தாருன்னா ஆபிசுக்கு வரச்சொல்லுங்கன்னு ….சொல்லிட்டு கார்ல ஏறிட்டு பெரிய கும்பிடு போட்டுட்டு கிளம்பிட்டார்….மார்க்கெட்டே ஆச்சரியமாக பார்க்கிறது….எங்க அம்மா ரொம்ப பேசத்தெரியாதவங்க. ….மறுநாள் நான் சாவி ஆபிஸில் ஒண்ணுமே தெரியாதவன் போல் என் வேலையை தொடர்ந்தேன்…..என் பக்கதில் வந்த சாவி சார் ஆதரவாக என் முதுகில் தட்டிக்கொடுத்து விட்டு என்னை கடந்து சென்றார்….

எனக்கும் அவர் அணுகு முறை பிடிக்கும்
சில முறை நேரில் சந்தித்த பாக்கியம் கிடைத்தன.
எளிமையானவர்.