
நடக்கும் தூரம் தான்
ஆனால் அதை
தாங்கி கொண்டு என்னால்
இனி நடக்கயிலாது
மகளின் தோள்களை
பற்றிக் கொண்டு
போய்ச்சேர்கிறேன்
என் முகம் கண்டு கதறி
அழுகின்றனர் அவன் மனைவியும்
குழைந்தைகளும்
நிச்சயம் என்னால்
காணயிலாது
கண்ணாடி பேழைக்குள்
அசைவற்றிருக்கும்
அவன் முகத்தை
பார்த்துதான் ஆக வேண்டும்
மனம் சொல்லிற்று
அருமை அருமை என்று
சிலாகித்த கவிதை ஒன்றை
அவனுக்காக மனதில்
முணு முணுக்கிறேன்
” இருப்பவை இல்லாமல்
போகலாம்
இல்லாதது
இருந்து கொண்டேயிருக்கும் “
பார்க்கிறேன் அவனை
சற்றைக்கெல்லாம் அவன் கைக்கட்டு பிரிந்து கைகள் பக்கவாட்டில் சரிந்தது
நான் அங்கில்லை இப்பொழுது.

நெஞ்சை நெகிழ வைத்த வரிகள்