மகரந்தச் சக்கரம்/எஸ் வி வேணுகோபாலன்

கோலம் வரைந்தவர் : பூர்ணலட்சுமி

வீட்டினுள் தான்
விட்டது
தரைச் சக்கரம்…

யாரோ
அதற்குள்
வாயில் கதவுகள் அகலத்
திறந்து விட்டு விடவும்
கிர் கிர்ரென்று
நாலாப் புறமும்
ஒரு தேர்ந்த
கபடி ஆட்டக்காரர் போலச்
சுழன்று சுழன்று முன்னேறிப்
பொன் மகரந்தத் தூள் சிதற
வாசல் சாய் தளத்தில் இறங்கி
அழகாக நிலைகொண்டு விட்டது
பூச் சக்கரம்!

6 Comments on “மகரந்தச் சக்கரம்/எஸ் வி வேணுகோபாலன்”

    1. பாராட்டவும் ஒரு மனம் வேண்டும் ..
      அது தங்களிடம் அபரிவிதமாக கொட்டிக்கிடக்கிறது்….
      நன்றி ..
      🙏 வாழ்க வளமுடன் 🙏

  1. அருமை. தரை சக்கரம் சுற்றுவதை கபடி ஆட்டக்காரர் சுழன்று சுழன்று ஆடுவதற்கு ஒப்பிட்டது புதிய உவமை. எஸ் வி. வி கபடி ஆடுவாரா தெரியவில்லை. ஆனால் அவரது கவிதைகள் கபடி ஆட்டக்காரர்கள் சில நேரம் நின்று நிதானித்து ஆடுவது போல ஒரு தாள லயத்துடன் வருகிறது.

Comments are closed.