
அன்று
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புகையில்
உயரக் கிளை ஒன்றின் உச்சியில் இருக்கும் மஞ்சனத்தி பூ வேண்டி
அடம் பிடித்த மகனுக்காக
நிலத்தை உந்தி வானில் பறந்து
தேவதையாய் பறித்து வந்த
மஞ்சனத்தி பூ ஒன்றை
இன்று அவன் மகனும் கேட்ட பொழுது
மீண்டும் அந்த தேவதையை மனதில் கொண்டு தவ்வ நினைத்தவனுக்கு
வாகாய் கொஞ்சம் வளைந்து கொடுத்தது
அந்த தாய் மரம்
