5 சென்ரியு கவிதைகள் /அழகியசிங்கர்

1.

புத்தகம் படிக்க உட்கார்ந்தான்
அப்போதுதான்
தூக்கம் வருகிறது

2.

ஏழையின் சிரிப்பில் இறைவன்
தக்காளி சிரிப்போ சிரிப்பென்று சிரிக்கிறது


3.

மடிப்பாக்கம் முழுவதும்
எருமைகள்
நடமாடும் மனிதர்கள்
எருமைகளா

4.


தாய் எட்டடிப் பாய்ந்தாள்
மகள் பதினாறு அடி பாய்ந்தாள்
பேத்தி 32 அடி பாய்கிறாள்


5.

முட்டி வலி போய்விட்டது
ஆனால்
முட்டியைப் பார்க்கும் போது
வலிப்பதுபோல் தோன்றுகிறது