
000
ஆடு மேய்கிறது
அமைதியாய் செடி
கத்துகிறான் செடிவிற்பவன்.
000
ஆடு தின்கிறது
செடி சாகிறது
ஆடும் சாகிறது.
000
ஆடு கடித்துன்கிறது
செடி வைத்தவன் விரட்டுகிறான்
நன்றியாய் அசைகிறது செடி.
000
தின்னத் தின்னத் துளிர்க்கும்
ஆட்டுக்கும் செடிக்கும்
பிரும்ம ஒப்பந்தம்.
000
ஆடு மேய்கிறது
யாரும் விரட்டவில்லை
யாருமில்லை அங்கே.
000
ஆடு பசியாறுகிறது
செடி பசியாற்றுகிறது
கவிதை நிறைவாகிறது.
000
ஆடு ஆடு ஆடுகள்
செடி செடி செடிகள்
மனிதன் மனிதர்கள்.
