யானை/செ.புனிதஜோதி

இன்றும் நீ
என் பிரமாண்டம்…

அம்மாவின்
சேலைமுந்தானைக்கு பின் நின்று
எட்டத் தூக்கும் தும்பிக்கையின்
அழகை மிரட்சினோடு
பார்த்த தருணமும்…

மணியோசைக் கேட்டவுடன்
வேகமாய் தெருவோரம் இறங்கி
ஐய்…யானை…யானையென
கூவி
என்சோட்டுகளை அழைத்த
தருணமும்…

இன்றும் தொற்றிக்கொள்கிறது
சாலையோரம் நீ நடக்கையில்…

எனக்குள்இருக்கும் குழந்தைதனம்
உன் பின்னால் நடைபோட்டு
வருகிறது இத்தனையும் தூக்கிக்கொண்டு