யானை/விஜயலக்ஷ்மி கண்ணன்

யானை வரும் பின்னே,
மணியோசை வரும் முன்னே!
அசைந்து அசைந்து நடக்கும் அழகே அழகு!
யானை முகத்தினை
மனை முன் வைத்தால் திருஷ்டி தோஷங்கள் அணுகாது என்று நம்பிக்கை.
யானை முகத்தோனை முழுமுதல் கடவுளாக காண்கிறோம்.
யானை மேல் தெய்வத்தின் ஊர்வலம் , சேர நாட்டில் சீவேலி.
யானை கொள்ளை கொள்ளும் அழகு
குழந்தைகளின் குதூகலம்.
சிறுத்த கண்களும்
முறம் போன்ற செவிகளும்,
முன் ,இடம் வலம்
ஆடி வரும் தும்பிக்கை,
பெருத்த உடலும், கொம்பும்,
ஆறுக்கும் அறுபதுக்கும் ஆனந்தம்.!!