சாதிக்கு நீதியில்லை/அனங்கன்

்்்் ்்்்

சாதிக்கவேண்டிய வயதில் எப்படிச் சாதி வந்தது….
குருதி மரபில் கொடுங்குணம்
உள்ளே படர்கின்றது.

அறங்கள் ஆயிரம் காலங்காலமாய் ஒற்றுமை பகர்கின்றது.
உள்ளே இருக்கும் மிருகம்…மீண்டும் பாய்கின்றது.

கல்வி இங்கே பண்பை எங்கே
வளர்க்கின்றது….?
ஆசான்களிடமே சாதி உணர்வு
பள்ளியைப் பிரிக்கின்றது.

…பிரித்தாளும்
கொடுமதியாலே கட்சிகள் பிழைக்கின்றது….வாக்குக்காக
சாதிக்கொடியைப் பிடிக்கின்றது.

எல்லாம் இங்கே திட்டமிட்டுத்தான் நடக்கின்றது…இதையும் வைத்து அரசியல் நடக்கும் நீதி சிரிக்கின்றது.

பெரியார்படம் எல்லாக்கட்சியிலும் இருக்கின்றது….அதற்கொரு மாலையைப்போட்டபின்….சாதிப்பேய்கள் ஆட்டம் தொடர்கின்றது.


♦.