யானை/வே.கல்யாணகுமார்.

.


காடெல்லாம் நானிருந்தேன் மனிதா! மனிதா! எனை கடைத்தெருவில் பிச்சையெடுக்க வைத்தாய் மனிதா! மனிதா!

வழித்தடத்தில் சுதந்திரமாக வாழ்ந்திருந்தேன் மனிதா! மனிதா.! என் வாழ்விடத்தை வளைத்து போட்டாய் பேராசை மனிதா! மனிதா!

யாருக்கென்ன தீங்கு செய்தோம் மனிதா! மனிதா! ஊரைவிட்டு ஒதுங்கி வாழ்ந்தோம் மனிதா! மனிதா! தெருமுனையில் கோவில் கட்டி குப்பிட்ட கையோடு.. எம்மை தெருத்தெருவாய் பிச்சை கேட்க வைத்தவனே மனிதா! மனிதா!

தந்தங்களை வெட்டிக்கடத்தி விற்பாய் மனிதா! மனிதா! சொந்தங்களாம் உயிர்களையே மறந்தாய் மனிதா! மனிதா! நொந்து போன யானை சொல்லை கேட்பாய் மனிதா! மனிதா! வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம் மனிதா! மனிதா!


One Comment on “யானை/வே.கல்யாணகுமார்.”

Comments are closed.