
சாதி என்பது சிறுகதை தான் அது
மீதியான பழங்கதைதான்
ஆதியில் சாதியை விதைத்தவர்கள்
பாதியில் மாண்டதை அறியாயோ?
நேர்மைக்குச் சாதியில்லை -உடல்
வேர்வைக்குச் சாதியில்லை – காதல்
பார்வைக்கும் சாதியில்லை-
பின் சாதிப்
போர்வைக்குள் நீ மட்டும் ஏன்?
அன்புக்குச் சாதியில்லை -உயர்
பண்புக்குச் சாதியில்லை -செய்யும்
வம்புக்கும் சாதியில்லை-
பின்
வீம்புக்குச் சாதிகள் ஏன்?
கருத்தை வெட்டியும் ஒட்டியும் பேசலாம்
சாதியால்
சிரத்தை வெட்டினால் ஒட்டிட இயலுமோ? உன்
சிரத்தையை பிறர் நலத்தில் காட்டு
உயிர்குடிச்
சிறுத்தையை நிறுத்து
அன்பால் திருத்து.

Miga Arumai!🙏🙏👏👌
நன்றி மேடம்