யானை/அழகியசிங்கர்

யானை கடவுளைப்போல
அது எத்தனை தூரம்
மனிதனிடம் வளைந்து
அழகியசிங்கர்கொடுக்கிறது தெரியுமா?
மற்ற மிருகங்களுடன்
வாலாட்ட முடியாத மனிதன்
கம்பீரமான யானையிடம்
வாலாட்டுகிறான்
தன் சுயநலத்திற்காக
பிச்சை எடுக்க வைக்கிறான்
பாவம்
மனிதன் வயிற்றை நிரப்ப
அதுவும் பிச்சை எடுக்கிறது