முதல் குழந்தை/அதிரன்

ஊன் உறக்கம் மறந்து
ஏழு நாளாயிற்று
மணிக்கு
அப்போதைக்கு அப்போது
துதிக்கையை காற்றில்
துளாவது போல் ஒரு பாவனை
செய்து கொண்டிருந்தது.
மாற்றுப் பாகனை பக்கத்தில்நெருங்க விடலில்லை
பெரும் உருமல் சத்தத்தோடு.
மருத்துவர் மணியை வெளிவட்டத்தில்
சுற்றி வந்து பார்த்து விட்டு
உடலுக்கும் ஒன்றுமில்லை
மனதுக்கு தான் ஏதோ ?
ஆனாலும் நிலைமை ஆபத்துதான்
என்றுமுடித்துக் கொண்டார்.
கோயில் அதிகாரி அவசரக் கூட்டம் ஒன்றை கூட்டி எப்படியும்
பாகன் கேசவனை கேரளாவிலிருந்து வரவழைக்க முடிவு
எடுத்தாயிற்று..
வளர்த்த மகள் சமீபத்தில் காதலனுடன் ஓடிவிட்டதால்
மகளை தேடும் படலத்தில் கேசவன் தற்பொழுது கேராளாவில் தாமசம்.
மணி நிலமை கேட்டு ஓடோடி வந்தவர்
குரல் கொடுக்கிறார்
” எந்தா மோனே எழுந்திரு” என்று மலையாளத்தில்
குரல் கேட்டு குதித்து எழுந்து நின்ற மணி ஓங்கி பிளிறிற்று
கோயில் முழுவதும் எதிரொலிக்க
ஓடி வந்து தனது துதிக்கையால் பாகனை அனனத்துக் கொண்டது நேடுநேரம்
அவரது முதல் குழந்தை.


  • உலக யானைகள் தினத்திற்க்காக

One Comment on “முதல் குழந்தை/அதிரன்”

Comments are closed.