எச்சரிக்கை விடுக்கிறது நாங்கேறிசம்பவம்/செ.புனிதஜோதி

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற வரிகள் பாடப்புத்தகத்தில் மட்டும் தானே
இன்னும் இருக்கிறது.இன்னும் மனித மனங்களில் அகலாத முடிசூடிய சின்னமாய் அல்லவா இருக்கிறது.21ம் நூற்றாண்டிலும்
அந்த நச்சு வேர் பள்ளி மாணவர்கள் மனதிலும் பரவியுள்ளது. என்பது நாங்குநேரியில் நடந்த சம்பவமே சாட்சியாகிறது.

மனிதர் நோக மனிதர் பார்க்கும் வழக்கம்

இருந்துக்கொண்டே இருக்கிறது.சாதி என்னும் பார்தீனிவிதை எப்போது விதைக்கப்பட்டதோ அப்போதே ஆதிக்கமும்,அடக்கமுறையும் மனித மனத்தில் தலைவிரித்தாடுகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 17 வயது பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டியதில், அவரும் அவரது 13 வயது தங்கையும் பலத்த காயம் அடைந்தனர். அந்த வீட்டில் இருந்த முதியவரொருவர் உயிரிழந்துவிட்டார். அக்குழந்தைகள் இருவரும் அரசு மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். என்று கேட்கும் வேளையில்
மனிதமற்றவர்களுக்கா மனிதன் என பெயர் வைத்துக்கொண்டனர் என்றவினாவும் சேர்ந்தே எழுகிறது

, “நாங்குநேரி சிறுவன் வெட்டப்பட்டதற்கு சாதி தான் அடிப்படை காரணம். தற்போது கைது செய்யப்பட்ட மாணவர்கள், பள்ளியில் படிக்கும் பொழுது பாதிக்கப்பட்ட மாணவனை சாதி ரீதியாக மிகவும் இழிவுபடுத்தி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவன் பள்ளிக்குச் செல்லாமல் இருந்துள்ளார். அச்சிறுவன் நன்றாக படிக்கும் காரணத்தினால் வகுப்பு ஆசிரியர்கள் தாங்களாக முன்வந்து மாணவன் பள்ளிக்கு வராதது குறித்து அவரது பெற்றோரிடம் கேட்டிருக்கிறார்கள். பின் அவர்களை பள்ளிக்கு வரவழைத்து மாணவன் பள்ளிக்கு வராததற்கு உண்டான காரணம் குறித்து எழுத்துப்பூர்வமாக தலைமை ஆசிரியர் எழுதி வாங்கி இருக்கிறார். அதில் சக மாணவர்களால் மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும் சாதி ரீதியாக இழிவுபடுத்தப்படுவதாகவும் எழுதிக் கொடுத்திருக்கிறார் மாணவர்.

இதனால் ஆத்திரம் கொண்ட அதே பள்ளியில் படித்த பிற சிறார்கள், அன்று இரவே சம்பந்தப்பட்ட மாணவர் வீட்டிற்கு சென்று அவர்களை சரமாரியாக வெட்டி உள்ளனர். அப்போது உடன் இருந்த அவரது 13 வயது தங்கையையும் வெட்டி உள்ளனர். இதை தொடர்ந்து தலைமறைவாகியிருந்த 6 சிறார்களை போலீசார் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சிறார்கள் வளர்ப்பு மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

எங்கே செல்கிறது உலகம்?,எதனைக் கற்றுத்தர முயற்சிக்கிறது.சாதியின் பெயரில் கட்சிகள்,ஓட்டிற்காக வளர்க்கும்
தலைமை கூட்டங்கள்,சமத்துவமற்ற சமத்துவத்தை இம்மண்ணில் விளைவிக்கின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் பழியைப் போட்டு தப்பிக்கும் விசயமல்ல.வீட்டில் தொடங்க வேண்டும் அதன் பின் ஆசிரியர்கள்,ஊடகங்கள் என
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் சாதி என்பது நச்சு, நாளை நம்குழந்தைகளை
அழிக்கும் ஆயுதம் என புரியவைக்கவேண்டும்.

எல்லோரையும் கடைசியில் மண் தான் தாங்கபோகிறது என்னும் உண்மை புரியவேண்டும். என்று ஆசிரியர்களை
அடிப்பது,திட்டுவது,ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் மாணவர்களை கண்டிக்க தவறிவிட்டோமோ அன்றே சீர்கெட்ட சமுதாயத்தை உருவாக்க காரணமாகி விட்டோம்.

மனிதத்தை வளர்க்க கூடிய பண்புகளை ஏடுகளில் ஏற்றுங்கள்.சமூகநீதியை போதிக்கும் ஏடுகளை உருவாக்குங்கள்.எப்போது அடிபட்டுகிடப்பவன் நம்ம வீட்டு உறவு என்று நினைக்கிறோமோ அப்போதுதான்
மாற்றங்கள் எழும்.முதலில் சாதியை தூக்குங்கள் பள்ளியிலிருந்து. நம்மாளு பிள்ள என்ற சொல்லை குழிதோண்டி புதையுங்கள்.

வடமாநிலங்களை விட
நம் தமிழ்நாடு பெரியமாற்றங்களை கண்டுள்ளது என்றால் பெரியார்,அம்பேத்கரின் செயல்பாடுகள்,சொற்கள் சமத்துவத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்த்தது.நாங்கேரி சம்பவத்தின் மூலம் இன்னும் நீங்காமல்இருக்கும் சாதியை நீக்க ஒரு கை ஓசை போதாது.அனைவரும் இணையவேண்டும் .

இங்கே இருக்கும் பிரச்சினை என்னவென்றால் அவனை விட இவன் பெரியவன்,இவனை விட அவன் பெரியவன் என தன்னை மட்டுமே நோக்குவதன் காரணமாகத்தான் இடபங்கீடு முதல் ஆவணக்கொலை வரை
இன்று வரை நடந்துக்கொண்டே இருக்கிறது.ஒவ்வொரும் நமக்கான பிரச்சினைகள், நாளைய பிள்ளைகளுக்கான பிரச்சினைகள் என யோசிக்க ஆரம்பித்தால்தான் முடிவு வரும்.

இதில் பள்ளிக்கல்விதுறை அமைச்சர் என்ன செய்யவார். நன்றாக செயல்படுபவர்களையும் குறை கூறி விரட்டுவது நோக்கமாய் பணிபுரிந்தால் நமக்குள் இருக்கும் களையை நீங்காமல் தூண்டிவிட்டு பற்ற வைத்து குளிர் காயந்துக்கொண்டுயிருப்பவர் வளர்ந்துகொண்டேதான் இருப்பார்கள்.வீட்டிலுள்ளவர்கள் ,ஆசிரியர்கள் முழுநேரம் பிள்ளைகளோடு இருப்பவர்கள்.அவர்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை பகிர்ந்து அவர்களை திருத்தம் செய்ய முயற்சிக்கவேண்டும்.
பேதமற்ற எண்ணத்தை உருவாக்க இணைந்து செயல்படவேண்டும்.சட்டங்கள் கடுமையாக்கபடவேண்டும்.ஆசிரியர்கள் நியாயமாகவும், பொறுப்புடன் செயல்படவேண்டும். ஆசிரியர்களுக்கு முழுசுதந்திரம் அளிக்கபடவேண்டும்.மலத்தை விட்டு எறிந்த போதும் விடாமுயற்சியோடு செயல்பட்ட சாவித்திரிபூலேப் போல் ஒவ்வொரு ஆசிரியரும் மாணவர்கள் மனதில் வலுவாக சமூகநீதியை,மனிதத்தை நிலைக்கச்செய்ய ஆசிரியர்கள் ஒன்று இணைந்து செயல்பட்டால் நிச்சயம் சாதி என்னும் தொற்றுநோயை தூர விரட்ட முடியும். அபாயத்திற்குள் செல்லும் இளைய சமுதாயத்தை மீட்க நாங்கேறி சம்பவம் எச்சரிக்கைஒலி.சட்டம் நியாயத்தின் பக்கம் நிற்கட்டும்.

One Comment on “எச்சரிக்கை விடுக்கிறது நாங்கேறிசம்பவம்/செ.புனிதஜோதி”

  1. தமிழ்நாட்டில் பள்ளி சிறவர்கள் மத்தியில் இந்த நிலை உள்ளது என்பது எவ்வளவு வெட்கக்கேடானது. சிறுவர்களே இப்படியென்றால் பெற்றோர்கள் எப்படி இருப்பார்கள். எந்தளவு ஜாதீயம் தீயாய் இந்த சமுதாயத்தில் உள்ளது. மற்ற மாநிலங்களில் இதை விட மிகவும் கொடுமையாக இருக்கிறது. இதற்கு தீர்வுதான் என்ன?

Comments are closed.